ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
சனிதப மகரி
நிதபமகரிச
கண்ணழகு பாப்பா
உன் கைகளைக் காட்டு
உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்
சின்ன சின்ன ராஜா
என் அருகினில் வாடா
உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
காகிதப் பூவில் வாசம் இல்லை ரோஜாவை வைத்தேன்
காதல் கொண்ட ராணியின் பக்கம் ராஜாவை வைத்தேன்
கண்ணாடி உன் உள்ளம்
கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்
உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்
அந்தி படும் போது என் அழகிய வீடு
பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்
வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு
தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
லல்லல்லல்லல்லா... லல்லல்லல்லல்லா...
கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது தான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து உண்பது பேரின்பம்
இரை போடும் உள்ளங்கள் என்றும் வாழும் தீபங்கள்
இல்லை என்று சொல்லாத தங்கக் கிண்ணங்கள்
நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்
இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்
கலகலப்பாக நல்ல ஒளிமயமாக
தினம் கல்யான வீடென வாழும் இல்லம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
----------------------------------------------------------------------------
பாடல்: ஆலயம் என்பது
படம்: தாமரை நெஞ்சம்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்:
No comments:
Post a Comment